Posts

ஜெய்பீம் திரைப்பட விமர்சனம்

 ஒரு திரைப்படம் மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிதும் நினைத்து கூட பார்க்கவில்லை. அம்மாதிரியான ஒரு தாக்கத்தை #ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.  இப்படம் ஒடுக்கப்பட்ட இருளர்/ பழங்குடியினர் வாழ்வியலோடும், காதலோடும் துவங்குகிறது, அத்துடன் சாதி இந்துக்கள் அவர்களை நடத்தும் விதத்தையும் விவரிக்கிறது. பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பழங்குடியினரின் நாதியற்ற நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது. காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைகள், சிறைக் கொலைகள் (lock up death) #விசாரனை படத்தின் இன்னொரு கோர முகத்தை காட்டுகிறது. படத்தில் பிரகாஷ்ராஜ் தவிர்த்து, மற்ற காவல்துறை அதிகாரிகளை பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு கோபமும், வெறுப்பும் தானாகவே எழுகிறது. இவ்வளவு மோசமான காவல்துறை அதிகாரிகளின் கையில் சட்டம், ஒழுங்கு இருப்பது நமக்குள் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் #பிரகாஷ்ராஜ் போல ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகள் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. வழக்கறிஞராக வரும் சூர்யா கம்யூனிஸ்ட்டாக வருகிறார், அவரின் போராட்ட குணம...